ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குசில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது

ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களுக்கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடு 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Sharing is caring!