ரெஜினாவின் கொலை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

யாழ். சுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கை நீதவான் ஒத்திவைத்தார்.

வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் இன்று மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Sharing is caring!