லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2 ஆம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2 ஆம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இரவு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்டதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சகாதேவன், இசிதோர் ஆரோக்கியநாதன் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், அரச தரப்பில் இரண்டாம் எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மன்றினால் உண்மை விளம்பல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சுயமாக வழங்கப்படவில்லை.

எனவே, அதனை அரச சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாதென மேல் நீதிமன்றம் கடந்த மாதம் 3 ஆம் திகதி நிராகரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2 ஆம் எதிரி சார்பில் சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!