வடக்கின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

10 ஆவது வடக்கின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆண்டுதோறும் 60,000-இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் இக்கண்காட்சியில் இம்முறை 2,500-இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.

10 ஆவது தடவையாக இடம்பெறும் கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பான வகை, பொதியிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள், ஆடையணி, விவசாயம், நுகர்வோர் பொருட்கள் என மேலும் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.

யாழில் இந்த வர்த்தகக் கண்காட்சி ஜனவரி 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Sharing is caring!