வடக்கில் இன்று புதன்கிழமை மின்வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை

யாழ். பிரதேசத்தில்:

கொழும்புத்துறை, நெடுங்குளம், மணியம் தோட்டம், உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில்:

ஆண்டிய புளியங்குளம், புதுக்குளம், பட்டாணிச்சூர் கிராமம், லக்ஸபானா வீதி, தோணிக்கல் ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசத்தில்:

நானாட்டான் பிரதேசம் பெரிய கரைசல் பிரதேசம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Sharing is caring!