வடக்கில் சூறாவளி…..ரணில் 10 க்கு மேற்பட்ட நிகழ்வில் கலந்துகொள்கிறார்

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை காலை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்க ளிலும் சுமாராக 10ற்கு மேற்பட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் வரும் பிரதமர் யாழ்.போதனா வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா மற்றும், நாவற்குழி, கைதடி பாலம் கண்ணோட்டம், காங்கேசன்துறை விஜயம் என 8 நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 நிகழ்வுகளிலும் தொடர்ந்து மன்னார் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டங்களில் 3ற்கும் மேற்பட்ட நிகழ்வுகளிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

Sharing is caring!