வடக்கில் மாம்பழ செய்கை விஸ்தரிப்பு

வட மாகாணத்தில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்து.

வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டத்தில், 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Sharing is caring!