வடக்கு ஆளுநர் விடுத்த உத்தரவு!

வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டிருந்ததுடன் இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத் தேர்வினை நடத்துமாறும் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதற்கமைய சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ளநிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்றயதினம் வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் விண்ணப்படிவங்களை பெற்று கொள்வதற்காக நூற்றுக்கணக்கான தமிழ்,சிங்கள,முஸ்லிம் சுகாதார தொண்டர்கள் இன்று காலை முதல் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்பாக குவிந்தனர்.

குறித்த விண்ணப்படிவங்கள் பூர்த்திசெய்யபட்ட பின்னர் மீண்டும் திணைக்களத்திற்கு வழங்கபட்டு அவர்களிற்கான நேர்முக தேர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கல்வி தகமை, வயது எல்லை பாராது சேவைக் காலத்தின் அடிப்படையில் தங்களிற்கு நியமனங்கள் வழங்க படவேண்டும் என்று நீண்ட காலமாக சுகாதார தொண்டர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!