வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும்

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அதிகாரி கணப்பதிப்பிள்ளை சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்காளவிரிகுடா பகுதியில், கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை அப்பகுதியிலிருந்து செல்லுமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Sharing is caring!