வடக்கு குடிநீர் பிரச்சினை…தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை….ஆளுனர் சுரேன் ராகவன்

வடக்கில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை காண் பதற்கு வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒரு திட்டத்தை கூட முன்வைக்கவில்லை.

இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் தெரி­வித்­துள்­ளார். கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்கு அண்­மை­யில் அவர் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்­கில் ஆறு­கள் இல்லை. காலம் கால­மாக மழையை நம்­பியே மக்­கள் விவ­சா­யம் செய்­த­னர். மழை நீரைக் குளங்­க­ளில் சேக­ரித்­தனர். ஆனால் அந்­தக் குளங்­கள் தற்­போது என்ன நிலை­யில் உள்­ளன என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

பல குளங்­கள் காணா­மல் போய் விட்­டன. வடக்கு – கிழக்குத் தமி­ழர் தாய­கம் என்று அர­சியல் பிர­மு­கர்­கள் கூறிக் கொள்­கின்­ற­னர். ஆனால் மனி­த­னுக்­குப் பிர­தான விட­யம் இந்­தக் குடி தண்­ணீர்.

வடக்­கில் உள்ள தண்­ணீர் பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக் கொள்­வது தொடர்­பாக அல்­லது அதற்­காக திட்­டம் இருக்­கின்­றது, அதை நடை­ மு­றைப்­ப­டுத்த உத­வுங்­கள் என்று எந்த அர­சி­யல்­வா­தி­க­ளும் என்­னி­டம் வந்­தது இல்லை.

பொது­மக்­கள் சந்­திப்­பில் மக்­க­ளின் துன்­பங்­கள், தேவை­கள் எமக்­குத் தெரி­கின்­றன. அவற்­றில் சில விட­யங்­க­ளைத் தீர்த்­துக் கொள்ள முடி­யும். தண்­ணீர் போன்ற விட­யங்­ கள் நாடா­ளு­மன்­றில் பேசப்­பட வேண்­டும்.

அப்­போ­து­தான் வேலை­களை நகர்த்த முடி­யும். என்­னி­டம் வரும் அர­சி­யல்­வா­தி­கள் கட்சி சார்ந்த தேவை­கள், உற­வு­கள் சார்ந்த வேலை ­க­ளைப் பேசவே என்­னி­டம் வரு­ கின்­றார்­கள்.

இந்த தண்­ணீர் விட­யம் தொடர்­பில் அதன் அவ­சி­யம், இருப்­புத் தொடர்­பில் நான் கிட்­ டத்­தட்ட 4 அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கூறி­னேன். இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை. அதற்­கான திட்­டங்­கள் கூட அவர்­க­ளி­டம் இருக்­க­லாம்.

அவற்றை எங்­க­ளி­டம் தந்து துறை­சார்ந்த நிபு­ணர்­க­ளோடு ஆலோ­சித்­தால்­தான் அதற்கு ஒரு தீர்வு கிடைக்­கும் – என்­றார்

Sharing is caring!