வடமராட்சி நெல்லியடி இளைஞர் ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் வைத்து படுகொலை

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியீடப்பட்டுள்ளது

துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுகுள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு ,மலை, காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும் குடியோறிகளை ஆள் கடத்தல் மாபீயா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும்

இன்நிலையில் குறித்த இளைஞனும் ஆள்கடத்தல் மாபீயா குழுவினால் கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ் நாட்டுக்குள் நுழைய காட்டுப் பகுதி ஊடாக அழைத்து செல்லப்பட்டாத தெரிவிக்கப்படுகின்றது.

இன்நிலையில் குறித்த இளைஞர் கிறீஸ் எல்லை காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக துருக்கி பொலிஸ் மீட்டுள்ளனர்.

Sharing is caring!