வட மாகாணத்துக்கு 134 அரச நியமனங்கள்

இந்த நிகழ்வு, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

73 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களும், 42 சாரதிகளுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 19 மகளிர் விவகார அமைச்சின் கீழான நியமனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், வட மாகாண ஆளுநருடன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கேவன், பொதுச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!