வட மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் நிறைவு

வட மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் இன்று (23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஆட்சிக்கு வந்த வட மாகாண சபையின் பதவிக்காலமே இவ்வாறு முடிவடைகிறது.

வடமாகாண சபையில் உள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 7 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஓர் ஆசனத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!