வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு, ‍கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெறுகின்ற துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்காக நகரில் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இவ்வாறு நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பல முறியடிக்கப்படுவதோடு, குற்றவாளிகளை இனங்கண்டு கைதுசெய்யும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Sharing is caring!