வரவுசெலவுத் திட்டப் பிரேரணை

2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டப் பிரேரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வரவுசெலவுத் திட்ட பிரேரணை தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி உரையாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்துவது தொடர்பிலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Sharing is caring!