வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது

இன்றைய தினத்தை அரசாங்க விடுமுறையாக அறிவிக்கும் வகையில், நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று வழமைபோன்று செயற்பாடுகள் இடம்பெறும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பல அரச நிறுவனங்களுக்கு புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹகே என்பவரும் சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வரையறுக்கப்பட்ட ஐக்கிய செய்திப் பத்திரிகை நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்தபிரிய ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக செயலாளராக ரொஷான் வெலிவிட்ட நேற்று (28) நியமிக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!