வர்த்தமானி தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை

அரச அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வர்த்தமானிகள் உள்ளிட்ட அரச ஆவணங்களை தனியார் துறையிடம் கையளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமது தொழிற்சங்க நடவடிக்கை 3ஆவது நாளாக தொடர்வதாக அரச அச்சக ஊழியர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத் லால் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் மீது அரசியல் பழிவாங்கல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச அச்சக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை தம்முடன் கலந்துரையாடவில்லை எனவும் சரத் லால் மேலும் தெரிவித்தார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச அச்சகர் கங்கானி கல்பனியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வர்த்தமானி அறிவித்தல்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தாமதாகவில்லை என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அத்தியாவசிய ஆவணங்களை அச்சிடுவதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!