வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிவாரணங்களுக்காக 9000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனபடிப்படையில், நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை கூட்டுறவு சங்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sharing is caring!