வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது

நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் எரிபொருள் விலை மறுசீரமைப்பை சாட்டாக வைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!