வளி மாசடைதலைக் குறைப்பதற்காக புதிய வேலைத்திட்டம்

கண்டி நகரத்தில் வளி மாசடைதலைக் குறைப்பதற்காக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி நகர மத்தியில், 55 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வளிமீளாய்வுப்பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரிவினூடாக வளிமாசடைதல் தொடர்பில் ஆராய்வதுடன் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை தொடர்பிலான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!