வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாடசாலை விடுமுறைக் காலம் நிறைவடையும் முன்னர், வவுச்சர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S