வவுனியாயில் பல ஏக்கர் காணி சேதம்

வவுனியாயில் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதமையினால் பல ஏக்கர் காணி சேதமாகியுள்ளது.

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீவிபத்தில் 10 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகின எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!