வாகனங்களின் விலை சற்று அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு​ அரசாங்கம் இன்று (30) முதல் முன்னெடுக்கும் நடவடிக்கைகளினால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்மூலம், நாட்டில் வாகனத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன வரிச்சலுகை மீது விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுக்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் வணிக வங்கிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் குத்தகை சங்கங்கள் ஆகியன பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கும் எனவும் சம்பத் மெரன்சிகே மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!