வாகனம் பெற தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு 60,000 டொலர் பெறுமதியான வாகனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனைவரது வாகன அனுமதிப் பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாத்திரம் அதனை வழங்க முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

சி.வி.விக்னேஷ்வரனின் அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02) நிராகரிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!