வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்புடைய ஆவார் குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்புடைய ஆவார் குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்படுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு நின்றிருந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து வாள்கள் கொண்டு அங்கு நின்றிருந்தவர்களை துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அவதானித வாள்வெட்டு குழுவினர் கிணற்றுக்குள் மறைந்து இருப்பவர் மீது கிணற்றுக்குள் வைத்தே கல்வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
இவ்வாறு ஆவா குழுவினர் கிணற்றுக்குள் வைத்து தாக்குவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
ஆயினும் சம்பவம் நடைபெறும் வீதியால் கோப்பாய் பொலிஸார் வந்த போது சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றியதுடன் தாக்குதல் நடத்திய இளைஞர்களில் மூவரை கைது செய்தனர்.
ஆனாலும் அங்கு தாக்குதல் நடத்திய ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.