வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயம்

யாழ். சாவகச்சேரியில் இரு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி – சங்கத்தானை, மீனாட்சி அம்மன்கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 11 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் 55 வயதுடைய ஒருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர்.

தலையில் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவளை, சாவகச்சேரி – மீசாலை மேற்கில் அமைந்துள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் பெண்ணொருவரின் நகையை அபகரித்ததுடன், 53 வயதுடைய ஒருவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

Sharing is caring!