வாழ்க்கைச் செலவு குழு அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கான நிர்ணய விலையாக 88 ரூபாவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான விலையாக 108 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு விலைகளில் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான சம்பா அரிசிகளுக்கும் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், புதிய நிர்ணய விலை ஒரு வாரத்திற்குள் அமுல்படுத்தப்படும் என துமிந்த பிரியதர்ஷன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!