விகா­ரை­யின் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடை­நி­றுத்த வேண்­டும்

முல்­லைத்­தீவு, நாயா­றில் உள்ள நீரா­வி­ய­டி­ யில் அமைக்­கப்­ப­டும் விகா­ரை­யின் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடை­நி­றுத்த வேண்­டும் என்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்­ளது.

அந்­தப் பகு­தி­யில் பிக்கு ஒரு­வர் விகாரை அமைக்­கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார். கரைத்­து­றைப்­பற்­றுப் பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட அந்­தப் பகு­தி­யில் சபை­யின் அனு­மதி இன்­றியே விகா­ரை­யின் கட்­டு­மா­னப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

அவற்றை உடன் நிறுத்த வேண்­டும் என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­ருக்­குப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் கடி­தம் மூலம் கோரி­யி­ருந்­தார். இந்த விட­யம் தொடர்­பில் ஆரா­யுங்­கள் என்று கரைத்­து­றைப்­பற்­றுப் பிர­தேச செய­ல­ருக்கு மாவட்­டச் செய­லர் பணித்­தி­ருந்­தார்.

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மான காணி­யில் பிக்கு ஒரு­வர் 60 அடி உய­ரத்­தில் விகாரை அமைக்­க­வும், அத­னு­டன் இணைந்­த­தாக விடுதி அமைக்­க­வும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.

பௌத்த சாசன அமைச்­சுக்கு உட்­பட்ட திணைக்­க­ளத்­தில் அதற்­கான அனு­மதி பெற்­றுள்­ளார். ஆனால் பிர­தேச சபை­யின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வந்­தது. இந்த விட­யத்தை மாவட்­டச் செய­லர் பிர­தேச சபைக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

பிர­தேச சபை­யின் அனு­மதி பெறப்­ப­டாது விகாரை அமைக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரா­கப் பிர­தேச சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு அமை­வாக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கு கடந்த 28ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம் எதிர்­வ­ரும் 10ஆம் திக­தி­வரை விகா­ரைக் கட்­டு­மா­னங்­க­ளுக்கு இடைக்­கா­லத் தடை விதித்­தது.

அதே­வேளை, குருந்­தூர்­ம­லை­யில் புத்­தர் சிலை அமைக்­கும் நோக்­கு­டன் பிக்­கு­கள் உள்­ளிட்ட குழு­வி­னர் சென்­ற­னர் என்று கூறப்­ப­டும் சம்­ப­வம் தொடர்ச்­சி­யாக முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கு விசா­ரித்த நீதி­மன்­றம் தொல்­லி­யல் ஆய்­வு­களை மேற்­கொள்ள பௌத்த மத­கு­ருக்­க­ளுக்கு யார் அதி­கா­ரம் கொடுத்­தது என்­பது தொடர்­பில் அறிக்­கை­யிட வேண்­டும் என்று தொல்­லி­யல் திணைக்­க­ளத்­துக்­குப் பணித்­துள்­ளது.

Sharing is caring!