விக்­னேஸ்­வ­ரனை பத­வி­யி­லி­ருந்து நீக்­கும் அதி­கா­ரம் மாகாண ஆளு­ந­ருக்கு உண்டு

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வகை­யில் கருத்­துக்­களை வெளி­யி­டும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நீதி­ய­ர­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரனை, அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கும் அதி­கா­ரம் மாகாண ஆளு­ந­ருக்கு உண்டு. அரச தலை­வ­ரின் அறி­வு­றுத்­த­லைப் பெற்று ஆளு­நர் அதைச் செய்ய முடி­யும்.

இவ்­வாறு சட்­டத்­துறை வல்­லு­நர் பிர­தீபா மஹ­நாம ஹேவா தெரி­வித்­துள்­ளார்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே வடக்கு – கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மா­ளின் பத­வியை முன்­னாள் அரச தலை­வர் ஆர்.பிரே­ம­தாஸ பறித்­தெ­டுத்­தார் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.இது­தொ­டர்­பில் சிங்­கள ஊட­க­மான மவ்­பிம வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

நாட்­டின் ஒற்­று­மைக்கு குந்­த­கம் ஏற்­ப­டும் வகை­யில் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­து­வ­ரும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 10 பேரும் மற்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ர­னும் சட்­ட­ரீ­தி­யாக சவால்­களை எதிர்­கொள்­ள­வுள்­ள­னர்.

இந்த அர­சி­யல்­வா­தி­கள் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்தை ஊக்­கு­விக்­கும் நட­வ­டிக்­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ளைப் பெற்­றுள்­ள­தாக மகிந்த ஆத­ரவு கூட்டு எதி­ர­ணி­யின் மூத்த உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

அவர்­க­ளின் பத்­தி­ரிகை அறிக்­கை­கள் மற்­றும் காணொ­லிப் பதி­வு­க­ளைத் திரட்டி சட்­ட­ரீ­தி­யாக ஆராய்­வ­தற்­காக சபா­நா­ய­கர் கரு ஜய­சூர்­யா­வி­டம் முன்­வைக்­க­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

“பிரி­வி­னை­வாத இயக்­கத்­துக்கு ஆதா­ர­வா­கப் பேசு­வ­தும் நாட்­டின் ஒற்­று­மைக்கு சவால்­வி­டு­வ­தும் அர­சி­ய­ல­மைப்பை கடு­மை­யாக மீறும் செய­லா­கும். விஜ­ய­கலா விவ­கா­ரத்­தில் அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கும் அதி­கா­ரம் சபா­நா­ய­க­ருக்கு உண்டு. அவரை நீக்க முடி­யு­மா­யின் அதே குற்­றத்­தைச் செய்த ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யும். நாட்­டின் ஒற்­று­மை­யைப் பாது­காக்­கும் வகை­யி­லேயே தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அ.அமிர்­த­லிங்­கம், வி.தர்­ம­லிங்­கம். வி.என். நவ­ரட்­ணம் மற்­றும் எஸ்.சிவ­சி­தம்­ப­ரம் ஆகி­யோர் 1987ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் திகதி தமது நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர்”-­என்று சட்­டத்­துறை வல்­லு­நர் பிர­தீபா மஹ­நாம ஹேவா தெரி­வித்­துள்­ளார்.

Sharing is caring!