விசர்நாய்க்கடியால் பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்டும் நிலை

விசர்நாய்க்கடியால் பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்டும் நிலை காணப்படுகின்றது. எனவே எமது விழிப்புணர்வு செயற்பாட்டினை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.

இம்மாம் 29 முதல் 02ம் திகதி வரை விசர் நாய்க் கடிக் கெதிரான விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தி அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் எம்.ஏ.முகமட் பாஸி தெரிவித்தார்.

இன்று 26ம் திகதி காலை திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணப்பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் 2017ம் ஆண்டு முதல் விசேட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய விசர்நாய் கடி தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற் கொள்வதற்கான பணியை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விசர்நாய்கடி மற்றும் கட்டாக்காhலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே இம்மாதம் 29 முதல் நவம்பர் 02ம் திகதி வரை 46 அரச மிருக வைத்திய நிலையங்களிலும் இந்த தடுப்பூசி இடுதல் மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளது.
அத்துடன் 29ம் திகதி திருகோணமலை உற்துறைமுக வீதியில் உள்ள மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி ஒன்று திருகோணமலை மணிக்கூண்டு கோபுரம் வரை செல்லவுள்ளது.

அன்றைய தினம் காலை 11.00 மணியளவில் திருகோணமலை நகரில் உள்ள பிரபல 10 பாடசாலைகளில விசர்நாய்க்கடிக்கு நோய்க்கு எதிரான பாடசாலை மட்டத்திலான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம் பெறவுள்ளது. மற்றும் நாய்களுக்கான விசர்நாய்கடி நோய்க்கெதிரான தடுப்பூசி மற்றும் நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சை திருகோணமலை வரோதயநகர் பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sharing is caring!