விசா விதிகளை மீறிய 73 இந்தியர்கள் இலங்கையில் கைது

கொழும்பு:
விசா விதிகளை மீறி தங்கிய 73 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் இந்திய தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். விசா விதிமுறைகளை மீறுவோர் மீது அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விசா விதிகளை மீறி தங்கிய 73 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த 24 இந்திய தொழிலாளர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் மடுகாமாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த 49 இந்தியர்கள் விசா விதிமீறலுக்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோர் கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உரிய நடைமுறைகளை முடித்த பின் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!