விசேட அமைச்சரவைக் கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று (13) நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

சகல அமைச்சர்களுக்கும் இந்த விசேட கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

என்ன காரணத்துக்காக இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகின்றது என்பது தொடர்பில் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

வாராந்தம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் வழமை போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் (11) நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!