விசேட பேருந்து சேவையில் சிக்கல்கள் ஏற்படுமாயின் இ.போ.சபையின் 011 2 555 555ற்கு அழைக்கவும்!!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாயே கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த விசேட பேருந்து சேவைகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும்.

இதனடிப்படையில் 83 பேருந்துகள் மேலதிகமாக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடவுள்ளதுடன், இன்றைய தினம் 156 பேருந்துகளும், சனிக்கிழமை 124 பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 83 பேருந்துகளும், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் 52 பேருந்துகளும் மேலதிகமாக சேவையில் ஈடுபடவுள்ளன.

அத்துடன், தைப்பொங்கல் பண்டிகையின் பின்பு வெளிமாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் கொழும்பு நோக்கி திரும்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் பேருந்து சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுமாயின் இ.போ.சபையின் 011 2 555 555 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!