விசேட மேல் நீதிமன்றத்திற்கு இரண்டாவது மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிப்பு

பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்யும் விசேட மேல் நீதிமன்றத்திற்கு இரண்டாவது மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பீ. சசி மஹேந்திரன், சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா ஆகியோரும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!