விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை

“ சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில்­ இ­ருக்­கின்­ற­னர் என்று விஜ­ய­கலா என்ற பெண் புலி நினைத்­துக்­கொண்­டி­ ருக்­கின்­றார், சிங்­க­ள­வர்­கள் நித்­தி­ரை­யில் இல்லை. நாங்­கள் விழித்­துக் கொள்­ளும் நேர­மொன்று இருக்­கின்­றது. நாம் விழித் துக்­கொள்­ளும்­போது தலை­வர்­கள் என்று கூறிக்­கொள்­ளும் எவ­ரா­லும் எம்­மைத் தடுக்க முடி­யாது. அத­னால் உட­ன­டி­யாகச் சட்­டத்தை நடை­ மு­றைப்­ப­டுத்­துங்­கள்.

இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பியல்­நி­ஸாந்த தெரி­வித்­தார்.

முன்­னாள் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா தொடர்­பில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்­துத் தெரி­விக்கும் போது மேலும் தெரி­வித்­த­தா­வது:கூட்­ட­ர­சில் அங்­கம் வகிக்­கும் முன்­னாள் அமைச்­சர் விஜ­ய­கலா போன்­ற­வர்­கள் நாட்டை அழிக்­கும் வகை­யில் இவ்­வா­றான பரப்புரை களைச் செய்யும் போது, அர­ச­த­லை­வர் மைத்­திரி­பால சிறி­சேன அவற்­றைத் தடுக்­காது வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். எனவே மைத்­திரிபால அர­ச­த­லை­வர் பத­வி­யி­லி­ருந்து வில­கிச் செல்­ல­வேண்­டும்.

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி விஜ­ய­க­லா­வுக்குக் கடு­மை­யான தண்­டனை வழங்­க­வேண்­டும். அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து அகற்றி அல்­லது அமைச்­சர் பத­வி­யில் இருந்து வில­கு­மாறு கூறி மக்­க­ளுக்கு இனிப்­புக்­க­ளைக் கொடுத்து ஏமாற்ற முயற்­சிக்­கக் கூடாது. அவ்­வா­றான முயற்­சி­யில் ஈடு­பட்­டால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது படுக்கை மெத்­தை­க­ளைச் சுருட்­டிக்­கொண்டு வீட்­டுக்கு ஓட வேண்­டிய காலம் வெகு தொலை­வில் இல்லை என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன்” என்­றார்

“ நாடு மிக­வும் மோச­மான நெருக்­க­டியை நோக்­கித் தள்­ளப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் இரவு பத்து மணிக்கு நித்­தி­ ரைக்­குச் செல்­லும் நாட்­டின் அர­ச­த­லை­வ­ருக்கு நாடு முகம்­கொ­டுத்­துள்ள மிக­வும் பார­தூ­ர­மான பிரச்­சி­னை­களை மறு­நாள் நித்­தி­ரை­யில் எழுந்து பத்­தி­ரி­கை­க­ளைப் பார்க்­கும்­போதே அறிந்­து­கொள்­கின்­றார்.

எரி­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரிக்­கின்­றது. கல்­வித்­து­றை­யைச் சீர­ழிப்­ப­தற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­க­ளில் ஈடு­ப­டும் ஆசி­யர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­ர­சில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்­கள் தமது குறு­கிய அர­சி­யல் தேவை­க­ளுக்­காக இனங்­க­ளுக்­கி­டை­யில் மோதல்­க­ளைத் தூண்­டி­வி­டும் வகை­யில் பல்­வேறு இன­வா­தக் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­ற­னர் – என்­றார்.

Sharing is caring!