விஜயகலாவின் அமைச்சு நீக்கப்பட்ட தகவல் பொய், இன்றே தீர்மானம்- ஐ.தே.க

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து இன்று (04) அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு வருகை தருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரீன் பிரணாந்து அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரை நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பரவிவரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அமைச்சர் ஹரீன் கூறியுள்ளார்.

இன்று அவருக்கு எதிராக நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணையின் பின்னரே தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!