விஜயகலா உரை தொடர்பான நீதிமன்ற அறிக்கை

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ள சபாநாயகரிடம் அனுமதி கோரி வேண்டுகொள் விடுத்துள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்கவிடம் குற்றத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2018. ஜூலை 2 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

விஜயகலா எம்.பி.யின் உரை தொடர்பில் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sharing is caring!