விஜயகலா தொடர்பான சர்ச்சைதிசைதிருப்பும் ஒரு முயற்சியே : ரணில்

“டைம்ஸ் பத்திரிகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வெளியான ஊழல் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியே பாராளுமன்றத்தில் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பான சர்ச்சை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புலிகளை இந்நாட்டில் உருவாக்கும் தேவை தமக்கு ஒருபோதும் இல்லை. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்துக்கான சிறப்பு என்பவற்றை பாதுகாத்து சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நடவடிக்கையாகவுள்ளதாகவும் நேற்று (05) சபையில் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!