விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தமது திணைக்களத்தினரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

தண்டனைக் கோவைச்சட்டம் 120 ஆவது பிரிவின் கீழ், வழக்குத்தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 157 (அ) பிரிவு சட்டத்தின் கீழ், சட்ட மா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு LTTE அமைப்பு தொடர்பில் கருத்து வௌியிட்டமையினால் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

Sharing is caring!