விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Sharing is caring!