விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருந்தார் வாய்பாய்…ரணில் தெரிவிப்பு

விடுதலை புலிகளை எதிர்க்க இந்திய பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு வாஜ்பாய் பெரும் ஆதரவு கொடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதிமாக அங்கு சென்ற அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

பின்னர், வாஜ்பாய் குறித்த நினைவலைகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட அவர், இலங்கைக்கு உண்மையான நண்பராக திகழ்ந்த இந்திய பிரதமர்களில் சிறப்பான ஒருவர் தான் வாஜ்பாய் என குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை போர் தீவிரமடைந்த நேரத்தில் வாஜ்பாய் உடனான தனது தொடர்பு குறித்து பகிர்ந்துகொண்டார்.  இலங்கையின் பிரதமராக தான் இருந்த போது விடுதலை புலிகள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்ததாகவும். அப்போது, இலங்கையின் பொருளாதரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இது போன்ற சூழல்களில் இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். கடற்புலிகளை இலங்கை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.

அதே போல, 1977ஆம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நேரம் தானும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்ததாகவும். அந்த சமயத்தில் வாஜ்பாயுடன் தனக்கு நல்ல நட்பு இருந்ததாகவும், பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்த நிலையில் அந்த நட்பு தொடர்ந்ததாகவும் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

Sharing is caring!