விடுதலைப்புலிகள் காலத்தில் நிம்மதியான வாழ்க்கை…இப்போ எங்கே…தாய் கதறல்

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் அப்படித்தான் வாழ்ந்தோம் எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய் யுங்கள் எங்களை எங்கள் ஆட்சியில் விடுங்கள் என தனது பிள்ளையை பறிகொடுத்த தாய் ஒருவர் ஆளுநர் அலுவலகம் முன்பாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இன்று யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இதன் பின்னர் வடமாகாண ஆளுநர் ஆலுவலகத்திற்கும் சென்று மகஜர் கையளித்தனர். இதன்போதே மேற்குறித்த தாய் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில் எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்

Sharing is caring!