விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள்

மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, அகழ்வு பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் பொலிஸார் அதற்கான பணிகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி காந்திபுரம் பிரதேசத்தில் கடந்த வாரம் இரவு புதையல் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது தகவலறிந்த பொலிஸார் இந்தப் பகுதிக்கு சென்றனர். சந்தேகத்துக்குரியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னர் இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாக தெரியவந்ததையடுத்து, அங்கு ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sharing is caring!