விடுமுறைக்கு முன் பரீட்சை முடிவுகள்

தவணைப்பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி பாடசாலை அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பரீ்ட்சை முடிவுகளை விடுமுறைக்கு பின்னர் வழங்குவதனால் , பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பில் பெற்றோர் மதிப்பிடுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை கவனத்திற்கொண்டு கல்வியமைச்சின் செயலாளர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, மாணவர்களின் தவணைப் பரீட்சை முடிவுகளை விடுமுறைக்கு முன்னர் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Sharing is caring!