வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய விஜயகலா! யாழில் பரபரப்பு சுவரொட்டிகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வடமராட்சியின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக சர்ச்சையான கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவான சுவரொட்டிகள் அண்மைய நாட்களில் வடக்கின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவருக்கு எதிரான சுவரொட்டிகள் வடமராட்சிப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.

வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய விஜயகலா இந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை விஜயகலா அரசியலில் ஒதுங்கப்போவதாகவும், வெளிநாடொன்றிற்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Sharing is caring!