விமான நிலையத்தில் வைத்து இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்காக சென்ற வெளிநாட்டு தாய் மற்றும் மகள் நிலை

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்காக சென்ற வெளிநாட்டு தாய் மற்றும் மகள் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 65 வயதுடைய தாயும் 37 வயதுடைய மகளுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போதே குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டுடன் இங்கிலாந்து செல்லும் நோக்கத்தில் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த இரு ஈரான் பிரஜைகளையும் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sharing is caring!