விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது

மீற முடியாத நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.

இராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என்ற முன்நிபந்தனையின் அடிப்படையிலேயே மத்தள விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இலங்கை அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்படும் முன்நிபந்தனைகள் எதுவும் ஒருபோதும் நீக்கப்படாது.

இந்தியாவுடன் செய்து கொள்ளவுள்ள எந்தவொரு உடன்படிக்கையும் இரகசியமாக முன்னெடுக்கப்பட மாட்டாது. அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதம் நடாத்தப்பட்டு வாக்கெடுப்பில் நிறைவேறிய பின்னரே உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் நேற்று பாராளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டார்.

இந்திய விமான சேவைகள் அதிகார சபையுடன் கூட்டு முயற்சியாக மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னர் சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Sharing is caring!