விருது வழங்கும் ஊக்குவிப்பு

தேசிய ரீதியில் திறமையான வீரர்களைக் கௌரவிக்கும் ஸ்போட்ஸ்பெஸ்ட் – பிளட்டினம் விருது வழங்கல் ஊக்குவிப்பு செயற்றிட்டம் இன்று (28) அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

2018 ஸ்போர்ட்ஸ் பெஸ்ட – பிளட்டினம் விருது வழங்கும் ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் கல்வி அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா அமைப்பு மற்றும் அலியான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின்போது கால்பந்தாட்டம், றக்பி, பேஸ்போல் ஆகிய விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்தின் பாடசாலை மட்ட தங்கப்பதக்கம் அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் உமேஸ் புத்திக வசமானது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலப்பகுதியில் தேசிய, சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் பிளட்டினம் விருது வழங்கல் விழா எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ரத்மலான ஸ்டெய்ன் கலையத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்தது.

 

Sharing is caring!