விருந்தொன்றில் சோதனை நடவெடிக்கையில் 40பேர் கைது

சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றின்போது, பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் நடைபெற்ற விருந்தொன்றின்போது, ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருந்துபசாரம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், அது குறித்து கிடைத்த தகவலுக்கமையவே குறித்த பகுதிக்கு சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Sharing is caring!