விறகு பொறுக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தில் விறகு பொறுக்க காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போய் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 52 வயது உடையவர் என்றும் இவர்  20.07.2018 ம் திகதி பகல் 1.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்றுள்ளதாகவும் திடீரென காட்டுப்பகுதியில் மாயமாகி உள்ளதாக அவருடன் சென்றவர்கள் கூச்சலிட்ட போதிலும் அவரை காணவில்லை என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவரை தேடி  20.07.2018 பொலிஸார் தேடுதலை மேற்கொண்ட போதிலும் அவர் கிடைக்கவில்லை என்றும் நேற்று  21.07.2018 அதிகாலை விசேட பொலிஸ் குழு ஒன்றினை காட்டுப்பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!